top of page
Post: Blog Post

மந்திர லோகம் - அத்தியாயம் 1

Writer's picture: Priyanka Priyanka

லோகத்தில் நிறமெல்லாம் வெள்ளை , சிவப்பும் மற்றும் மஞ்சளாக இருக்கும்.


நாம் மனித உலகத்தில் இருக்கின்றது போலவே , மந்திர உலகத்திலும் மனிதர்கள் இருப்பார்கள் .


ஆனால் அங்கு ஏழை , பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை. இன்னும் சொல்லப்போனால் மந்திர லோகத்தில் பணம் ஒன்றே இல்லை.


மந்திர லோகத்தில் புண்ணியம், பாவம் வைத்துதான் மனிதனை கனிக்கின்றனர். அதிக புண்ணியங்களை சேர்ப்பவர்கள், புண்ணியக்கார்கள். அதிக பாவங்களை சேர்ப்பார்கள் சபிக்கப்பட்டவர்கள்.


இந்த மந்திர லோகத்தில்,


பாவம் , புண்ணியம் என்பது தான்‌ சேர்ப்பதை பொருத்தே அமைந்து இருக்கும். இங்கு மந்திரவாதி, இறந்த போன பிணங்களுக்கு உயிர் கொடுக்கின்ற சக்தி என்பது கிடைக்கின்றது. அவ்வாறு மந்திரவாதிகள் , இறந்து போன‌ பிணங்களுக்கு , உயிர் கொடுக்க வேண்டுமென்றால் , மந்திர லோகத்திற்கு நன்மைகள் செய்து இருக்க வேண்டும். அப்போதான் மந்திரவாதிகள் பிணத்திற்கு உயிர் கொடுக்க முடியும்.


இறந்துபோனவர்கள் உயிரோடு வந்தால் , அனைவரையும்பார்க்க முடியாது , அவர்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்களின் கண்களுக்கு மட்டுமே தென்படுவார்கள் .


மந்திரவாதிகள், பாவம் செய்து இறந்து போன பிணங்களுக்கு உயிர் கொடுத்தால் , அந்தப் பிண குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் . மந்திரலோத்திற்கும் ஆபத்து ஏற்படும்.


மேலும் ஆவிகளாகவும் வலம் வருவார்கள்.


புண்ணியம் செய்து இறந்தவர்கள், அவர்கள் புண்ணியத்தை தன் குடும்பத்திற்கும் பகிர்ந்து அதிகமாகவும் கிடைக்கச்‌செய்து புண்ணியக் காரர்களாகவும் மந்திர லோகத்தில் வாழ்வார்கள்.


பாவம் செய்தவர்கள் இறந்தபின், தன்னோட பாவங்களை , அவர்களுடைய குடும்பத்திற்கே சென்றடையும் , மந்திர லோகத்தில் சபிக்கப்பட்டவராகளாவே வாழ்வார்கள்.


அதேபோல, மந்திரவாதிகள் பிணங்களுக்கு உயிர் கொடுத்தால் புண்ணிய காரங்களுக்கு மட்டும் தான் கொடுப்பார்கள்.


உயிர் பெற , பிணங்கள் புண்ணியங்களை சேர்த்தவர்களா‌..! அல்லது பாவங்களை சேர்த்தவர்களாக..!


என அறிவது.?


மந்திர லோகத்தில் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட காதலர்கள்..!


லக்ஷன், சுசீலா


இவர்கள் புண்ணிய காதலர்கள் என்று மந்திர லோகத்தில் மதிப்பிடப்பட்டனர். இவர்களின் காதல் பயணத்தில் ஒரு மிகப் பெரிய ஆசை இருந்தது. அதுதான் இவர்களின் கல்யாணம், அதற்காக இரு குடும்பத்தினர்களுக்கும் இவர்களின் புண்ணிய காதலை சொல்லி ஒன்று சேர ஆசைப்பட்டனர்.


சுசீலாவின் குடும்பத்தினர் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆனால் லக்ஷனின் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். மறுப்பு தெரிவித்தது மட்டுமன்றி, தான் குடும்பத்தின் மதிப்பு மரியாதை, குடும்பத்தின் மரியாதையை இழந்து விடுவார்களோ என்று சுசீலாவை கொல்வதற்கு திட்டம் கொண்டு ‌, அவளைக் கொல்ல ஆட்களை அனுப்பிய பொழுது, இதனை தெரிந்து கொண்ட லக்ஷன் , சுசீலாவை வேறு இடத்திற்கு அவளை அழைத்துச் செல்லும் பொழுது, லஷனின் தந்தை ஆட்களை வைத்து சுசீலாவை கொல்ல முயற்சித்த பொழுது லக்ஷன் இடையே வந்து அவன் உயிரையும் மாய்த்துக் கொண்டான் . அதுபோல் சுசீலாவையும் கொன்றுவிட்டு அந்த ஆட்கள் சென்றுவிட்டனர்.


இந்த செயலால் சுசீலாவின் குடும்பத்திற்கு புண்ணியத்தையும், லக்ஷனின் குடும்பத்திற்கு பாவத்தையும் மந்திர லோகம் அளித்தது,

லக்ஷனின் குடும்பம் பாவ குடும்பமாக மந்திரலோகத்தில் மதிப்பிடப்பட்டனர்.

லக்ஷன் , சுசீலா இறந்த 30 நாட்களில் , லஷனின் குடும்பம், பசி , பட்டினியால் இறந்து போனார்.


இக் காதலர்களுக்கு உதவ ஒரு மந்திரவாதி முயற்சி செய்கிறார். அவரின் பெயர் அக்னி .


அக்னி என்ற மந்திரவாதி , நாம் கதையின் கதாநாயகனும் கதாநாயகியும் உயிர் கொடுக்க முயற்சித்து , தன் உயிரின் ஆபத்தை நினைக்காமல் உதவ நினைக்கிறார்.


நம் கதையின் கதாநாயகன்-கதாநாயகியை இழந்து 100 நாட்கள் கடந்து.


இவர்களின் உயிரினை , பூஜை செய்து மீட்டெடுக்க தேர்ந்தெடுத்த இடம் ஊருக்கு தொலைவில் உள்ள ஒரு மலை குகை.


இவர்கள் பாவ , புண்ணிய குடும்பமாக உள்ளதால் ரகசியமாக இவர்களுக்கு உயிர் கொடுத்த , மந்திரவாதி அக்னி , உயிரையும் தியாகம் செய்து உதவி செய்யக் கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.


அந்த மலைக் குகைக்கு கதாநாயகன் - கதாநாயகியின் பிணங்களை எடுத்து சென்று பூஜை செய்து அவர்களுக்கு உயிரை கொடுத்தனர்.


உயிர் கொடுக்கும் தருவாயில் ,மந்திர லோகத்தின் வானெல்லாம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதனை அறிந்த சித்தருக்கு இவ்வானிறத்தினைக் கொண்டு விவரம் அறிந்தார்.‌


உயிர் வந்த பின்னர் காதலர்களின் ஆசையும் நிறைவேற்றப்பட்டது, அந்த மலைக்குகையில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு , கதாநாயகன் கதாநாயகியின் கழுத்தில் தாலியும் கட்டினார். இருவருக்கும் திருமணம் என்பது நடந்த பிறகு.


ஒரு ஆபத்தான நிகழ்வு நடக்கப்போகின்றது என்று எண்ணி மந்திரவாதி அக்னி , அந்த இடத்திலிருந்து இருவரையும் போகச் சொல்கிறார்.


அந்த ஆபத்தான நிகழ்வு என்பது என்னவென்றால், மந்திர லோகத்தில் சித்தர்களும் உள்ளனர். இவர்களின் பணி உயிர் வந்தவர்களின் எண்ணிக்கையும் அவர்களின் முழு விவரத்தையும் அறிவதுதான் இவர்களின் பணி.


மந்திரலோகத்தின் சித்தர் , மலை குகைகுள் வருவதை அறிந்த மந்திரவாதி அக்னி , பதட்டத்துடன் இருந்தார் ….


நடந்தது என்ன..?

1.நம் கதையில் வரும் கதாநாயகன் கதாநாயகி எங்கு சென்றார்கள்?

2. காதலர்களின் உயிரினை ஏன் எழுப்ப எண்ணினார்?

3.அக்னி என்பவர் யாவர்?

4.இவர்கள் எழுந்தபின் 100 நாள்களில் என்னவாயிற்று?

5.கதாநாயகன் கதாநாயகி எதற்காக உயிர் கொடுக்க நினைத்தார் அக்னி?


இவ்வளவு கேள்விகளுடன் உங்களை மீண்டும் சந்திப்போம் என்று எண்ணி தற்போது விடைபெறுகின்றேன்.

இந்த கதையை வருகின்ற அத்தியாயத்தில் நாம் காண்போம்.

- எழுத்தாளர் பிரியங்கா ஸ்ரீ

இந்த சிறுகதையை முழுவதுமாக தெரிந்துகொள்ள எங்களை பின் தொடருங்கள்..

இந்த கதையில் உங்களுக்கு பிடித்த சிலவற்றை பகிரவும்.

உங்களுக்கு கதை வடிவில் கேட்க வேண்டும் என்றால் எங்கள் YouTube Channelல் கேட்கலாம்.

- நன்றிகள்.







4 views0 comments

Recent Posts

See All

என் உயிர் அன்பே

#lovestory #schoollove #tamillovestories அறிமுகம் கதாநாயகன்: அபி, ஆணழகன் பார்க்கும் பார்வையில் மெழுகை போல உருக்கும் தன்மையைக் கொண்ட...

Comments


Subscribe Form

Thanks for submitting!

  • Instagram
  • Facebook
  • YouTube
  • Blogger

©2022 by Story Corner. Proudly created with Wix.com

bottom of page