![](https://static.wixstatic.com/media/f83886_8222dd1c66f54d07a86a33a65e009137~mv2.png/v1/fill/w_980,h_634,al_c,q_90,usm_0.66_1.00_0.01,enc_auto/f83886_8222dd1c66f54d07a86a33a65e009137~mv2.png)
5 ஆண்டுகளுக்குப் பிறகு
… காலையில்
வித்யா: டேய் எஞ்சிக்கோ டா!! நேரம் பாருடா !!!
சுபாஷ்: ஹா மா (நேரம் பார்த்து வேகத்துடன் தயாராகிறான்)
விஷ்ணு: டேய் சுபாஷ் போகிற வழியில்
யாழினிய காலேஜ்ல விட்டுவிடு!!
சுபாஷ்: அப்பா அவன் புறப்பட விடிந்து விடும்ப்பா எனக்கு ஏற்கனவே நேரம் அகுது.
விஷ்ணு: ஆபீஸ் கு நேரம் ஆகுதுல சுபாஷ் புறப்படு
(ஐந்து நிமிடத்தில்)
யாழினி: அண்ணா!!! நான் தயார்!!
விஷ்ணு: பாருடா சுபாஷ்!! தங்கச்சியை ரெடி ஆயிட்டா நீ என்ன இவ்வளவு நேரம் பண்ற!!
சுபாஷ்: இதோ பா
(வேக வேகமா சுபாஷும் யாழினியும் சாப்பிடுறாங்க, விஷ்ணு சுபாஷின் வண்டியைத் துடைத்து வைக்கின்றார்)
(சுபாஷ் வண்டி எடுக்கின்றான்)
(சுபாஷ்சும் யாழினியும் காலேஜ்க்கு போகின்றார்கள்)
யாழினி: அண்ணா எனக்குக் காலேஜ் ல விழா அண்ணா புது டிரஸ் வேணும்.
சுபாஷ்: சரி, எனக்கு வேலை இன்னிக்கி இல்லை என்றால் நாம் ஷாப்பிங் போகலாம். காலேஜ் முடிஞ்ச பிறகு எனக்கு ஃபோன் பண்ணி கூப்பிடு.
யாழினி: சரிங்க அண்ணா, நம்ம ஷாப்பிங் போகிறோம் ஜாலி!!!
(இவங்க பேசிட்டு இருக்கும்போது காலேஜ் வந்துடுச்சு)
யாழினி: பாய்!! அண்ணா, காலேஜ் அப்றம் பார்க்கலாம்
சுபாஷ்: பார்த்துப் போ, பாய்!!
(யாழினி காலேஜ் உள்ளே போனாள். சில சில நேரங்களில் ஆபீஸ் கு சென்றான் சுபாஷ்)
(சுபாஷ் ஆபீஸ் குல போனவுடனே சுரேஷ் மகேஷ் பக்கத்துல போய் நின்றான். சுரேஷ் தன் காதலிடம் கடலைப் போட்டுக் கொண்டு இருக்கின்றன)
சுபாஷ்: டேய் இவன் என்ன டா, பிரியா கு காலேஜ் இல்லையா!!
மகேஷ்: என்னமோ போங்க டா!!
சுரேஷ்: மேடம், இன்னைக்கு ஆஃப் (off) …
(பிரியா அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள், அவள் நன்றாகப் படிப்பாள், அதனால் அவளுக்குப் படிக்க இலவசமாகக் கல்லூரியில் மெரிட் சீட் கிடைத்தது. சுரேஷும் பிரியா ஐஸ்வர்யா மூலம் அறிமுகம் ஆகின்றார்கள். ஐஸ்வர்யாவின் சிறந்த தோழி பிரியா. சில நாட்களில் இருவரும் காதலர்கள் ஆக அவர்கள் உறவு தொடங்கியது. அன்றிலிருந்து அவள் வாழ்க்கையில் அவன்தான் அவளுக்கு எல்லாம். தனக்கு யாரும் இல்லை என்று ஒரு நொடி கூட உணராமல் பாத்துக்கொள்கின்றான். பிரியா காலேஜ் பேராசிரியராகப் பணி ஏற்றார்.)
சுபாஷ்: மச்சான் டேய், யாழினி ஷாப்பிங் போகணும் சொன்ன!!
மகேஷ்: டேய் நானும் வரேன்டா, நானும் போகனும்!!
சுபாஷ்: அப்போ இந்தக் கழுதையை என்ன பண்ணுறது
சுரேஷ்: நானும் வரேன்டா பிரியாவும் ஏதோ வாங்கணும் சொன்னால்
மகேஷ்: ஆமா கூட்டிடுவா அவளும் வீட்டுல இருந்து தனியா உங்கிட்ட பேசிட்டு இருக்குறது பதிலா வரட்டும்!
சுரேஷ்: (தொலைபேசி அழைப்பில்) அம்மு இன்னைக்கு ஈவினிங் ஷாப்பிங் போகலாம் ஒகே வா?
சுபாஷ்: அவளை என்னடா கேட்டுட்டு இருக்க வரச் சொல்லு அவ்ளோதான்
பிரியா: (தொலைபேசி அழைப்பில்) சரி எங்க போகலாம்?
சுரேஷ்: எங்க டா ?
மகேஷ்: ஒரு நல்ல ஷாப்பிங் மால் சொல்லச் சொல்லு!! இந்தப் பொண்ணுங்களுக்கு தெரியாத ஷாப்பிங் மாலா!!
சுபாஷ்: ஆமா ரைட்டு…
சுரேஷ்: அம்மு நீ யோசித்து சொல்லு, போகலாம்!!
(பாஸ் வராங்க)
சுரேஷ்: வைக்குறேன் மா பாஸ் வந்துட்டாரு என்னக்கு மெசேஜ் (Message) பண்ணு
பிரியா: சரி மா……… (ஃபோன் கால் கட்)
சுபாஷ்: குட் மோர்னிங் சார்
பாஸ்: என்ன சுபாஷ் வேலை பாக்கலையா ? இங்க நின்னுட்டு பேசிட்டு இருக்கீங்க
பாஸ்: போய்ட்டு வேலை பாருங்க சுபாஷ்!
சுபாஷ்: ஒகே சார்
பாஸ்: சுரேஷ் நீங்க என் கேபின் கு வாங்க
மகேஷ்& சுபாஷ் (மனக் குரல்) : எவளோ நேரம் ஃபோன் பேசுனல வாங்கி கட்டிக்கோ!!
(சுரேஷ் - பாஸ் பின்னாடியே போனான்)
சுரேஷ் - சொல்லுங்க சார்
பாஸ்: இன்டர்வியூ !! சுரேஷ், நீங்கத் தயாரா?
சுரேஷ்: வார வரம் தான் பாஸ், ரைட்டரும் நானும் அந்த வேலைய தான் பாஸ் இருக்கோம்!!
பாஸ்: நம்ம சேனல்கு டிஆர்பி ரெட்டுங் தான் முக்கியம்!!
சுரேஷ்: கண்டிப்பா பாஸ்
(பாஸ் கிட்ட பேசிட்டு சுரேஷ் வெளியே வரான்)
மகேஷ்: என்ன டா சம டோஸ் ஹ??
சுரேஷ்: அட போங்க டா, இன்டர்வியூ ரெடியானு கேட்டாரு!!
மகேஷ்: சரி சரி, நீ வேலை பண்ணு…
(சுரேஷ் தலையில கை வச்சுட்டு உக்காந்துட்டு இருப்பாங்க)
இவங்க பண்ற வேலை தான் என்ன?? என்று உங்களுக்குச் சந்தேகம் உள்ளது, வாங்க இவர்களைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்!!
இவங்க மூணு பெரும் படித்தது பி.ஏ. இதழியல்., (BA Journalism). இவங்கல ஒரு ஒருவரும் தனிப்பட்ட திறமை மற்றும் தொழில்முறை திறமைபற்றிக் முதலில் காண்போம்.
சுரேஷ் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் (Sports man) தேசிய வீரர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளராகத் திகழ்கின்றார், பட்டிமன்றத்தில் சுரேஷ் அடிச்சிக்க யாரும் இல்லை. தான் செய்யும் வேலை அலுவலகத்தில் நேரடி பேட்டி எடுப்பார், இன்டர்வியூ (Reporter). மேல் படிப்பு படித்தது Master of Journalism & Mass Communication, இன்னும் சுரேஷ் பத்திரிகை மற்றும் வெகுஜன தொடர்பியல் துறையில் டாக்டர் ஆஃப் ஃபிலாசபியில் படித்து வருகிறார். (Doctor of Philosophy in Journalism and Mass Communication)
மகேஷ் ரொம்ப படிப்பாளி ஒரு அரசு அதிகாரியாக வேண்டும் என ரொம்ப கஷ்டப் பட்டு இரவு நேரம் படிப்பார், மற்றும் அலுவலகத்தில் பத்திரிக்கையாளராக (Journalist) உள்ளார். இவர்மேல் படிப்பு படித்தது MA in Public Relations.
சுபாஷ் ஒரு கவிஞர் சிறப்பாகக் கவிதைகள் மற்றும் கதைகள் எழுதுவார், சுபாஷ் ஓடக் காதல் பிரிந்தப் பின்னர் எழுதத் தொடங்கியது. மாற்று அலுவலத்தில் ஒளிபரப்பு பத்திரிக்கையாளராக (Broadcast journalist) உள்ளனர். இவர்மேல் படிப்பு படித்தது MA in Broadcast Journalism. இவருக்குத் தன் படித்ததை வைத்துச் சுயமாக ஒன்றை செய்ய ஆசை.
பி.ஏ. இதழியல்., (BA Journalism) பிறகு மூவரும் ஒவ்வொரு பட்ட படிப்பைத் தொடங்கி பயணம் செய்யதனர்
மூவரும் ஒரே ஆபீஸ் வேலை பார்க்கின்றார்கள்.
சுரேஷ் மகேஷ் சுபாஷ் மூவரும் SMS போலத் தொடர்பில் ஒன்னவே இருப்பாங்க, மூவரும் ஒருத்தர் விட்டு ஒருத்தர் பிரியாத நண்பர்கள். ஆனால் மகேஷ்கு சுபாஷ்யின் காதல் பிரிந்தப் பிறகு அவன் பட்ட கஷ்டம் வேதனையை எல்லாம் பார்த்துக் காதல் மேல இருந்த மரியாதையையே வெருக்க தொடங்கினான்…
இருந்தாலும் சுரேஷ் காதலித்தும் மகிழ்ச்சியாகத் தான இருக்கின்றான் ஆனாலும், மனதில் ஒரு பயம் மகேஷ்க்கு அவன் நண்பர்களை நினைத்து.
நண்பர்கள் கூட இருக்கும்போது, சுபாஷ் கவிதை சொல்லிச் சொல்லிக் கொள்ளுவார். கவிதையில் அவன் இருக்கின்றாநோ இல்லையோ ஐஸ்வர்யா இருப்பாள். சுபாஷ் அவன் காதலித்த பழைய ஞாபகங்களை எல்லாம் நினைத்து ஐஸ்வர்யா ஐஸ்வர்யா என்று கவிதையில் அவளைப் பற்றிய யோசனை செய்துக் கொண்டு இருப்பர்.
இவர்கள் இருவரும் பிரிந்து ஐந்து வருடம் ஆனாலும் சுபாஷின் காதல் அவன் மனதில் விட்டுப் பிரியவில்லை. காதல் மீண்டும் தொடருமா என்று ஒரு கேள்வி குறி??
"கண் இமைக்கும் பொழுதிலே
உன் கண்மை எழுதுகிறது
ஆயிரம் கவிதைகளைக் கண்மணியே"
- கவிஞன் கபிலன்
… தொடரும்
留言